மழை என் மகளுக்கு சொன்ன செய்தி
15 வருசத்துக்கு முன்னாடி ஜீலை & ஆகஸ்ட் ல பேயுர மழை ல , ஆமீன்புரம் 12 தெருக்க உள்ளக்க அங்கங்க தண்ணீர் குளம் போல தேங்கி நிக்கும் 50 பைசாவுக்கு "கோயா" சைக்கிள் கடையில, 1/2 மணி நேரத்துக்கு செயின் கெளராத சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டு, தேங்கி நிக்குர தண்ணிய பார்த்து வேகமா அழுத்தி ஓட்டி விளையாடுவோம் , தண்ணிய கிழிச்சிட்டு பாயுர பைதாவுக்கு ரெண்டு பக்கமும் தண்ணீர் பூபோல விரிஞ்சி தெரிக்கும் மழை பேஞ்சு முடிஞ்ச மூனு , நாலு நாளைக்கு கன்னிமார்குளம் தாண்டி மழ தண்ணி 12 தெரு முனையயு தொட்டு தேங்கி நிற்க்கும் , ஹாமீன் புறம் மேக்க இருக்குர ரோட்டுக்கு கால் நனையாம போவ முடியாது , நீளம் நீளமா மண்புளு எல்லாம் மேட்டு பாத்து கொத்துகொத்தா நெழிஞ்சு வரும் , சாயஙகால நேரமாச்சுனா விதவிதமான தட்டான் பூச்சி, குளத்துக்குள்ளயும் & தெருல தேங்கி நிக்குர தண்ணிக்குள்ளயு முங்கி மிச்சம் தெரியுர குச்சி முனைக்கு மேல உக்காந்து பறக்கும் , மதியம், சாயங்கால நேரத்துல தெரு ஓரத்துல நின்னு கன்னிமார் கொளத்த பார்த்தா கடல் போல இருக்கும், அதுல இருந்து வர...