இடுகைகள்

திருட்டு "தம்"

படம்
சரியா அந்த நாள் 2004 கோடை காலம்  முழுவாண்டு பரிச்சை முடிஞ்சி 30 நாள் பள்ளிக்கூட  விடுமுறை இந்த ஹாமீன் புரம் 4 வது தெருக்குள்ள தெனம் எந்த அனாமத்து நடந்தாலும், காரணமா 5 பேர்ல ஒருத்தன் பேராச்சும் இருக்கும் அப்படி அன்னைக்கு எதுமே இல்லைனாலும் "எங்களுக்குள்ளயே எதாச்சும் காரணம் சொல்லி அடிச்சிக்குவோம் " நான் , நியாஸ் , ரஹீம் , மொம்மது , தஸ் , இப்படி ஒரு 14 வயசு பசங்க அஞ்சு பேர்தான் அது ஒரு நாள் ராத்திரி 7 மணிக்கு  5 பேரும் தனியா நின்னு ஒருதடவ பீடி குடிச்சு பாக்கலாம் , எப்படிதான் இருக்குனு தெரிஞ்சுக்க முடிவுபண்ணோம் கடையில வாங்கினா கடைகாரர் தரமாட்டாரோ ? வீட்டுல சொல்லிருவாரோ ?  வாங்குரப்ப பக்கத்துல தெரிஞ்சவங்க பார்த்துருவாங்களோ? னு , கடைக்கு போய் வாங்க ஒருத்தனுக்கும் தாயாரில்ல! வழக்கமா எதாச்சும் நடகுரதுக்காண்டி ஒருத்தன உசுப்பிவிட சொல்ர டயலாக்தான் "ஆம்பிளைனா வாங்கு .. பொம்பளைனா வாங்காத " அதயும் ஒருதனுக்கு ஒருத்தன் சொல்லி பாத்த்தாச்சி ஹ்ஹும் பீடி' ய கடையில வாங்கி ,  வீட்டுக்கு தெரிஞ்சு "அவங்க நம்மள தொவைச்சி தொங்க விடுரத விட" ஆம்பிளை'யே இல்லனு ஒத்துகுறது மேல்...

மழை என் மகளுக்கு சொன்ன செய்தி

படம்
15 வருசத்துக்கு முன்னாடி ஜீலை & ஆகஸ்ட் ல பேயுர மழை ல  , ஆமீன்புரம் 12 தெருக்க உள்ளக்க அங்கங்க தண்ணீர் குளம் போல தேங்கி நிக்கும் 50 பைசாவுக்கு "கோயா"  சைக்கிள் கடையில,  1/2 மணி நேரத்துக்கு செயின் கெளராத சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டு,  தேங்கி நிக்குர தண்ணிய பார்த்து வேகமா அழுத்தி ஓட்டி விளையாடுவோம் , தண்ணிய கிழிச்சிட்டு பாயுர பைதாவுக்கு ரெண்டு பக்கமும் தண்ணீர் பூபோல விரிஞ்சி தெரிக்கும்   மழை பேஞ்சு முடிஞ்ச  மூனு , நாலு நாளைக்கு கன்னிமார்குளம் தாண்டி மழ தண்ணி 12  தெரு முனையயு தொட்டு தேங்கி நிற்க்கும் , ஹாமீன் புறம் மேக்க இருக்குர ரோட்டுக்கு கால் நனையாம போவ முடியாது  , நீளம் நீளமா மண்புளு எல்லாம் மேட்டு பாத்து கொத்துகொத்தா நெழிஞ்சு வரும் ,  சாயஙகால நேரமாச்சுனா விதவிதமான தட்டான் பூச்சி,  குளத்துக்குள்ளயும் & தெருல தேங்கி நிக்குர தண்ணிக்குள்ளயு முங்கி மிச்சம் தெரியுர குச்சி முனைக்கு மேல உக்காந்து பறக்கும் ,  மதியம், சாயங்கால நேரத்துல தெரு ஓரத்துல நின்னு கன்னிமார் கொளத்த பார்த்தா கடல் போல இருக்கும்,  அதுல இருந்து  வர...