திருட்டு "தம்"

சரியா அந்த நாள் 2004 கோடை காலம்  முழுவாண்டு பரிச்சை முடிஞ்சி 30 நாள் பள்ளிக்கூட  விடுமுறை

இந்த ஹாமீன் புரம் 4 வது தெருக்குள்ள தெனம் எந்த அனாமத்து நடந்தாலும், காரணமா 5 பேர்ல ஒருத்தன் பேராச்சும் இருக்கும்

அப்படி அன்னைக்கு எதுமே இல்லைனாலும் "எங்களுக்குள்ளயே எதாச்சும் காரணம் சொல்லி அடிச்சிக்குவோம் "

நான் , நியாஸ் , ரஹீம் , மொம்மது , தஸ் , இப்படி ஒரு 14 வயசு பசங்க அஞ்சு பேர்தான் அது


ஒரு நாள் ராத்திரி 7 மணிக்கு  5 பேரும் தனியா நின்னு ஒருதடவ பீடி குடிச்சு பாக்கலாம் , எப்படிதான் இருக்குனு தெரிஞ்சுக்க முடிவுபண்ணோம்

கடையில வாங்கினா கடைகாரர் தரமாட்டாரோ ? வீட்டுல சொல்லிருவாரோ ?  வாங்குரப்ப பக்கத்துல தெரிஞ்சவங்க பார்த்துருவாங்களோ? னு , கடைக்கு போய் வாங்க ஒருத்தனுக்கும் தாயாரில்ல!


வழக்கமா எதாச்சும் நடகுரதுக்காண்டி ஒருத்தன உசுப்பிவிட சொல்ர டயலாக்தான் "ஆம்பிளைனா வாங்கு .. பொம்பளைனா வாங்காத " அதயும் ஒருதனுக்கு ஒருத்தன் சொல்லி பாத்த்தாச்சி




ஹ்ஹும் பீடி' ய கடையில வாங்கி ,  வீட்டுக்கு தெரிஞ்சு "அவங்க நம்மள தொவைச்சி தொங்க விடுரத விட" ஆம்பிளை'யே இல்லனு ஒத்துகுறது மேல்'னு  தோனுச்சு

அதனால , கடைல வாங்க கூடாதுனு முடிவு பன்னியாச்சு .

ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு எப்படியாவது  கொண்டுவரனும்னு முடிவெடுத்து

மருநாள் விடிஞ்சி , மதிய நேரம் நெருங்க நெருங்க பயம் படபடப்பு , இத செஞ்சி  மாட்டிகிட்டா ! நம்மள வீட்ல சோலிய முடிச்சி விட்ருவாங்கனு பயம் ஒருபக்கம் , இருந்தாலும்  என்னதான் இருக்குனு பக்கலாம்ங்குர எதிர்பார்ப்பு ஒருபக்கம்

நானும் & மொம்மதும் பீடி எடுத்துத்து வரோம்னு  சொல்லிருந்தோம்,

நியாஸ் தீப்பெட்டியும் தீக்குச்சியும் , பாதுஷா வாசனை வரகூடாதுனு, கொய்யா முட்டாய் வாங்கி வச்சிருந்தான்


ஒரு வழியா பீடி சுத்திட்டு இருந்த அம்மாக்கு தெரியாம பீடி தட்டுல இருந்து மடக்கி வச்சிருந்த 2 பீடிய நான் எடுத்துட்டு வந்துட்டேன் !  மொம்மது வும் எடுத்துட்டு வந்துட்டான் ! நியாஸ் தீப்பெட்டியா எடுத்தா மாட்டிப்போம்னு 5 தீக்குச்சிய எடுத்துட்டு வந்துட்டான் ! தஸ்' பீடி வாசனை தெரியாம இருக்க 'கொய்யா" முட்டாய கைய்ல வாங்கி வச்சிருக்கான்

இப்ப தேவைபடுரது தீக்குச்சிய பத்த வைக்குரதுக்கு 'பட்டை "
தீ"ப்பெட்டி பட்டைக்கு ஒவ்வொரு கடை வெளிபொறத்துலயும் தேடினோம் , ஒரு  வழியா 5ஆவது தெரு  சம்சு பாய் டீ"கடை வெளிய கிடந்த பாதி பட்டைய 'கால் விரலால" ரஹீம் தேடி எடுத்துட்டு வந்துட்டான் ஆனா கொஞ்சம் ஈரமா இருந்தது ,

இப்ப எல்லாமே ரெடி ,  ஆள் நடமாட்டம் இல்லாத இடமா தேடி கண்டுபிடிச்சோம்

அதுதான் இன்னைக்கு அமுதாபெட் காலனி போர வழில இருக்குர தைய்யுப் நகர்னு சொல்லுர இடம்  ,

அப்ப அந்த இடத்துல புல் முள்  காடு நிறைஞ்சி இருக்கும் ,

அதுல வெட்டையா இருக்குர இடத்துல குரவர்கள்  குடிசை போட்டு ரொம்ப நாளா தங்கியிருந்தாங்க , பின்நாள் ல அங்க மக்கள் வீட்டுமனை வாங்கி,  ப்ளாட் கல் போடவும்,   அவங்க தங்குர இடத்த மாத்திகிட்டாங்க.

வீடுங்க இல்லாதனால , அந்த வெட்டையில  இடத்துல கிரிக்கெட் விளையாடுரதுக்காக பசங்க நடமாட்டம் இருக்கும்

ஆள் வந்தா சைக பன்றதுக்காக மொம்மது மட்டும் அப்பப்ப வேவு பாத்துட்டு இருந்தான்

தீ"ப்பெட்டி பத்த வைக்குரதுல எனக்கு திறமை பத்தாத்து , மெழுகுவத்தி ஏத்துரப்பவே உரசுரப்ப ஒன்னு கைய்ய சுட்டுக்குவேன்,  தீ பயத்துல எப்படி குச்சிய பிடிக்கனும்னு தெரியாதுங்குரதால அத நான் செய்யல

ஆனா எங்களுக்கு முன்னாடியே பத்தவச்சி புகை  விட்டதா பீலா விட்டான் நியாஸ் , அதனால அவனயே இந்த ப்ராஜெக்ட் க்கு லீடரா இருந்தான்,

முதல் குச்ச பத்த வைக்க உரசுரப்ப , ஏற்க்கனவே  பட்டையில நனைஞ்சிருந்த ஒரு பக்க ஓரம் பிஞ்சி போயிருச்சு , அதே குச்ச மருபடி பத்த வைக்குரப்ப குச்சி மருந்து உடைஞ்சி வீணா போச்சி

ரெண்டாவது , மூனாவது  குச்சிய பத்த வைக்க உரசினப்ப அடிச்ச மதிய காத்துல அனைஞ்சி போச்சு !

இப்பதான் எல்லாருக்கும் படபடப்பு கூடுது , "கைய்யில இருக்குரது ரெண்டு குச்சி" இப்ப இத யார் பத்த வைக்குரது..? இதுவும் வீணாபோனா ! மருபடி ரொம்ப தூரம் நடந்து போய் வீட்டுக்கு தெரியாம எடுத்துட்டு வர்ரது நடக்குர விசயம் இல்ல ; நேரமும்  இல்ல ; தைரியமும் இல்ல


அச்சசோ.!! இவ்வளவு கஸ்டப்பட்டது வீணா போயிருமோங்குர பதட்டம் , எல்லாரும் சேர்ந்து ஒருத்தர ஒருத்தர் காரணம் சொல்லி திட்டிக்கிட்டோம் ...

இதுவரைக்கும் இந்த கூட்டுல தலமை தாங்குன நியாஸ் பய , தீ அணைஞ்சி போய் ' நாங்க கேட்ட மானங்கெட்ட கேள்வியால அவனுக்கே பத்த வைக்க முடியாதோங்குர சந்தேகம் வந்து மிச்சம் இருக்குர ரெண்டு குச்சியயும் , தீ" பட்டையயும் ரஹீம் கிட்ட கொடுக்குரான்

இப்ப நாங்க 5 பேரும் ரஹீம் பயல நம்பிட்டுதான் இருக்குரோம் ,

"மாப்ள நீதா ப்ரச்சனைய  நல்ல பத்த வைப்பியே " இத பத்த வை' னு அவன கிண்டல் செஞ்சது நியாபகம் வந்து போவுது

நாலாது குச்சிய எடுத்து  உரசுனதும் பத்திகிச்சு ! அணைய விட கூடாது' னு நாலுபேரும் வாயோட பீடிய கொண்டுபோய் 'தீ" முன்னாடி நீட்டுனதுல அடிச்ச மூச்சுக்காத்துலயே அனைஞ்சி போச்சு ;

"கடைசி குச்சி". இந்த 'சீன் படபடப்பெல்லாம் வாசிக்குர உங்களுக்கு புரியாது !  கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரம் வீட்டுக்கு தெரியாம , மத்த கூட்டாளிங்களுக்கு தெரியாம , ரெண்டு நாளைக்கு முன்னாடியே திட்டம் போட்டு சரியான நேரம் பாத்து அம்மா தட்டுல பீடி'யயும் ,
மதிய நேரம் வீட்ல எல்லாரும் தூங்கின நேரம் பாத்து  தீ'ப்பெட்டி எடுத்து தொரக்குர சத்தம் கேக்காம,   தீ' குச்சிய மட்டும் எடுத்துட்டு 'பெட்டிய அதே இடத்துல வைக்குரதும்

கடைசியா இதல்லாம் ஒளிச்சி யாருக்கும் தெரியாம கொண்டு வர்ரதுலாம்'  சாதாரண சமாச்சாரம் இல்ல ,

எங்க அஞ்சி பேருக்கு நம்பிக்கை போச்சு ; மருபடியு அஞ்சுபேரும் மாத்தி மாத்தி , 4 குச்சி அனைஞ்சிபோன காரணத்த சொல்லி திட்டிக்குரோம்

மொம்மதுக்கும்  & ரஹீமுக்கும் டீமுக்குள்ள எப்பவுமே சின்ன பலாயி இருந்துட்டே இருக்கும்,

இதுதான் சாக்குனு ரஹீம பார்த்து  , எலெ தடி யான"  பெரிய மைரு மாரி வாங்கி பத்தவக்கிரேனு அணைச்சிட்ட '

பதிலுக்கு  ரஹீம்  ;  நியாஸ் 3 குச்சிய வெஸ்ட் பன்னாம்ல ,  அத மட்டும் நீ கேட்டியா.? என்னைய மட்டும் கேக்குரீங்கனு ? கோவபட்டான்

ஒருவழியா ரெண்டுபேருக்கு சமாதானம் செஞ்சி  'கடைசி குச்சி" ய யாரு பொருத்துரதது' னு கொலப்பம் ;

மொம்மது நடந்துபோய் , அங்க தள்ளி கிடந்த பேப்பர  எடுத்துட்டு வந்து , உடைஞ்ச ரெண்டு செக்கலோட இடுக்குல வச்சான் !

தீக்குச்சி' ய பத்த வைக்க வாங்குன மொம்மது ரெண்டு நொடி யோசிச்சு மருபடியும் ரஹீம் கைய்யில குடுத்து நீ'யே பத்த வை" னு சொல்லிட்டான் ( திட்டுண திட்டெல்லாம் மைண்ட்ல வந்து போவுமா இல்லையா🤣🤣 )

ஒரு சின்ன துண்டு பேப்பர் மொம்மது கைய்யிலயும் , என் கைய்யிலயும்  ரெடியா இருந்தது

இப்பமொம்மது   ரஹீம பாத்து - நீ ஒரு ஆம்பளையா இருந்தா பத்த வைக்குரனு சொல்லவும்

என்ன நினைச்சான்' னு தெரியல தீ'குச்சிய கொளுத்தி பேப்பர்ல போட்டுட்டான்  , இப்ப பேப்பர் பத்திட்டு எரியுது , தீ' சின்னதா இருந்தாலும் , அத முதல் தடவையா பத்தவக்கிற  எங்ளோட பயம் பெருசா இருந்துச்சு !


எரிஞ்சிட்டு இருந்த தீ' யில  , கய்யில வச்சிருந்த பேப்பர காட்டி ,  ஒரு பீடிய பத்த வச்சி




 
மாத்தி மாத்தி வாங்கி எச்சிபாக்காம வாயில வச்சி புகை விட்டோம் ,  பீடி புகை ய உரிஞ்சி ஒரே இருமல் சத்தம்

எலெ எனக்கு தால ! எனக்கு தாங்கலனு மாத்தி மாத்தி வாயால உரிஞ்சி புகை விட்டப்ப அந்த சின்ன பசங்களுக்கு தெரியல அதுல ஒரு பெருமயும் இல்லனு

இதுலாம் முடிஞ்சியும் ரொம்ப நாளைக்கு, இதபத்தியே பெரிய விசயமா பேசிட்டு இருந்தோம் !   ஆளுக்கு எத்தன தடவ உரிஞ்சி பொகைய விட்டோம் , யாருலாம் எத்தன தடவ  இருமுனோம்னு கணக்கு வச்சி பெருமையா பேசி , கிண்டல் செஞ்சி சிரிச்சிட்டு இருந்தோம் ☺

ஆனாலும் அப்பப எங்களுக்குள்ளயே சண்ட பபோட்டுகுர நேரம்லாம் , பீடி குடிச்சத யார்டயும் சொல்லிருவானுங்களோ" னு பயம் இருந்துட்டே இருக்கும் 😢


அன்னைக்கு விளையாட்டா பீடி' யதொட்ட பிஞ்சு  விரல்கள்!  இன்னைக்கு வரைக்கும் விடல , நினைச்சாலும் விட முடியல

இதுல 2 பேர் வாழ்க்கை போதையிலயே பாதை மாறி  வீணா போனதுதான் "மிச்சம் "

போதை எந்த வகையில நெருங்கினாலும் பெருங்"கேடுதான்


____________


அடுத்ததா   "திருட்டு குடி"  ஒரு பீர் பாட்டில 7 பேர் சேர் செஞ்சி தண்ணி மிக்ஸ் செஞ்சி குடிச்ச ஸ்டோரில  மீட் பன்றேன்......🧤


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மழை என் மகளுக்கு சொன்ன செய்தி