மழை என் மகளுக்கு சொன்ன செய்தி

15 வருசத்துக்கு முன்னாடி ஜீலை & ஆகஸ்ட் ல பேயுர மழை ல  , ஆமீன்புரம் 12 தெருக்க உள்ளக்க அங்கங்க தண்ணீர் குளம் போல தேங்கி நிக்கும்

50 பைசாவுக்கு "கோயா"  சைக்கிள் கடையில,  1/2 மணி நேரத்துக்கு செயின் கெளராத சைக்கிள வாடகைக்கு எடுத்துட்டு,  தேங்கி நிக்குர தண்ணிய பார்த்து வேகமா அழுத்தி ஓட்டி விளையாடுவோம் , தண்ணிய கிழிச்சிட்டு பாயுர பைதாவுக்கு ரெண்டு பக்கமும் தண்ணீர் பூபோல விரிஞ்சி தெரிக்கும்  

மழை பேஞ்சு முடிஞ்ச  மூனு , நாலு நாளைக்கு கன்னிமார்குளம் தாண்டி மழ தண்ணி 12  தெரு முனையயு தொட்டு தேங்கி நிற்க்கும் , ஹாமீன் புறம் மேக்க இருக்குர ரோட்டுக்கு கால் நனையாம போவ முடியாது  , நீளம் நீளமா மண்புளு எல்லாம் மேட்டு பாத்து கொத்துகொத்தா நெழிஞ்சு வரும் , 

சாயஙகால நேரமாச்சுனா விதவிதமான தட்டான் பூச்சி,  குளத்துக்குள்ளயும் & தெருல தேங்கி நிக்குர தண்ணிக்குள்ளயு முங்கி மிச்சம் தெரியுர குச்சி முனைக்கு மேல உக்காந்து பறக்கும் , 

மதியம், சாயங்கால நேரத்துல தெரு ஓரத்துல நின்னு கன்னிமார் கொளத்த பார்த்தா கடல் போல இருக்கும்,  அதுல இருந்து  வரிசையா வர்ர சின்ன சின்ன அலைகள் வேடிக்கை பாக்குர அந்த சின்ன பைய்யனோட  கால தொடுரப்ப வந்த உணர்வ இந்த எழுத்துக்களால வெளிபடுத்த தெரியல

ஒரு நாள் விட்டு மரு நாள் , அரகுடம் தண்ணிய ஊத்தி 5 நிமிசம் விடாம அடிச்சா மட்டுமே வர்ர நல்ல தண்ணி ,  பம்ப் அடிக்கமலயே  கொப்பளிக்கும்  

மழை முடிஞ்சு சரியா 7 நாளைக்கு அப்ரமா இப்ப இருக்குர் EP office  தாண்டி அந்த சின்ன பைய்யன் அவன் சங்காத்தி சிலபேரோட வீட்டுக்கு தெரியாம கன்னிமார்குளம் தாண்டி நிலவரம் பாக்க போரது உண்டு 

போகுர வழியில அங்கங்க சின்ன சின்ன குவாரி,  ஊத்து குளம் , குட்டையிலலாம் வண்ணார் பெருமக்கள் துணியை சலவை  செஞ்சிட்டு இருப்பாங்க  

எதிர்ல மாட்டுவண்டி ஒன்னு ரெண்டு ஓடையில அள்ளுன மணல ஈர்த்தோட நிரப்பிட்டு தண்ணீ சொட்ட சொட்ட சொமந்து போவும்

ரஹ்மானியா பள்ளிக்கூடம் தாண்டவுமே அருவில தண்ணீர்  பாயுர மாதிரி நீர் ஓடுர சத்தம் கொஞ்சம் தூரமா கேக்கும் 

இப்ப இருக்குர அன்னை ஹாஜிரா பெண்கள் கலை கல்லூரி ஒட்டி இரண்டு ஓடை இருந்துச்சு , அந்த ஓடை கன்னிமார்குளத்துக்கும் வேய்ந்தான் குளத்தையும்  இணைக்கும் ,  மழை பேஞ்சு தண்ணி  நிரம்பினா இந்த ஓடை வழியாதான் தண்ணீ நிறம்பி ஓடும் ,  இடையில இருக்குர தோட்ட பாசனத்துக்காக இடையிடையில வரப்பு வெட்டி  தண்ணீர் தோப்புக்குள்ள எடுப்பாங்க ,  

ஓடையில  ஓடுர மழை தண்ணீ , அருவிபோல பாய்ஞ்சி ஓடுரத பாக்கவே அவ்ளோ தெளிவா கண்ணாடி போல அழகாவும் இருக்கும்,   

நாங்க மேல் சட்டைய கிழட்டிட்டு ஓடைக்கு உள்ள இறங்கி குளிப்போம் எங்க கழுத்துவரை ,  குறைஞ்சது  4 அடிக்கும் மேல ஓடையில தண்ணீ பாஞ்சி ஓடும்

அப்படி ஓடிட்டு இருக்குர ஓடைக்கு இடையிடையில சின்ன சின்ன பள்ளம் , தூரம் தூரமா தண்ணி வேகம் குறைஞ்சி , தேங்கி மருபக்கம் வேகமா நகரும் , அதோட தண்ணீர் விழுர எதிர் பக்கமா ! குளத்தில இருந்து வெளிய வந்த கெண்டை , கெழுத்தி  மீனல்லாம் தேடி பிடிப்போம் , ஒரு கெளுத்தி மீன் குறைஞ்சது 1 கிலோவரைக்கும் பெரிய கொடுக்கு மீசையோட நீந்திகிட்டு இருக்கும்,  அத 100 தடவ பிடிச்சாலும் கைய விட்டு நழுவி  ஓடும் , கெண்டை மீன்  அந்த சின்ன பைய்யனோட பேவரட் , அத வீட்டுல கொண்டுபோனா ? மீனுக்கு பதிலா ! அந்த சின்ன பைய்யன  ஆயில் இல்லாம பொரிச்சிருவாங்கனு பயந்து "  சங்காத்திங்க ஆளாளுக்கு ஒரு சாமான்"  உப்பு, எண்ணை, கத்தி,  தீப்பெட்டினு வீட்டுக்கு தெரியாம எடுத்துட்டு வந்து ,  வெட்டி ஓடை தண்ணீல கழுவி    உப்பு , மிளாகாய் பொடி தடவி சுட்டு திம்போம் ,  அந்த ருசிக்கு ஈடு ? 

அப்ப இருந்த 90 கிட்ஸ் எங்களுக்கு பாம்ப கைய்யால பிடிக்குரதெல்லாம் அசால்டான சமாச்சாரம் , நடந்து போர வழியில ரெண்டு பாம்பை யாச்சும் பார்த்து விரட்டி பிடிச்சி விளாடுவோம்

தவளை அங்கங்க கட்டி கிடக்குர சின்ன வளையத்துல முட்டையா போட்டு வச்சிருக்கும், பிறந்து 2 நாளான தவளை குஞ்ச'  மீன் குஞ்சினு  நினைச்சு ப்ளாஸ்டிக் கவர்ல தண்ணீ நெரப்பி பிடிச்சிட்டு வருவோம் 🤣

குளத்து நண்டு அங்கங்க குழி தோண்டி வாசல எட்டி பார்த்துட்டு இருக்கும் 

இதெல்லாம் கவனிச்சிட்டு கடந்து போகுர அந்த சின்னப்பைய்யன் தான்,  இன்னைக்கு அதே  ஒடைய ஒட்டி  சொந்தமா இடம் வாங்கி வீடு கட்டியிருக்குறேன் 


4/sep/17


18 வருசத்துக்கு முன்ன நடந்த சம்பவத்தையெல்லாம்  , என் 5 வயசு மக"கிட்ட கடைசி வருசம் 'மே" மாசம்  குவைத்ல இருந்து ஊருக்கு லீவுக்கு வந்தப்ப ,  வரண்டுபோன ஓடைய காட்டி சொன்னேன் ,  என் மக "  எதோ அத்தா "கதை' சொல்ர மாதிரி கேட்டுகிட்டா ! ஆனா என் மனைவி இந்த ஓடையிலயா? அப்படியா?  அது எப்படி! னு சொல்லி முனங்கினா , யாரா இருந்தாலும் அந்த வரண்ட ஓடைய பார்த்தா அததான் சொல்வாங்க 

அதுபோக கன்னிமார்குளம் சாக்கடை தேங்காம பாதுகாக்க பல போரட்டத்துக்கு அப்ரமா தூர்வாரி  , சுத்தி  மண் நிறைச்சி அடைச்சி வச்சிருந்ததால , ஓடைக்கு தண்ணி வர வாய்ப்பும் கிடைக்கல

ஆனா 17/12/2023 அன்னைக்கு பேஞ்ச பெரும்  மழை வெள்ளம்  , நான் அன்னைக்கு சொன்னதெல்லாம்  உண்மையாக்கிருக்கு, வீட்டுல என் பிள்ளைக்கும் மனைவிக்கும் , எங்க அம்மாவுக்குமே ஆச்சர்யம் தான் !!!



ஓடைக்கு பக்கத்துல வீட்ட கட்டுரப்ப 5 அடி உயரம்  அஸ்திவாரம் ஒசத்தி  "பீம்" வச்சிதான்  கட்டுவேன்னு 5 லட்சம் கூடுதலா செலவு செஞ்சி  வீடு கட்டினேன் , 

எல்லாரும் ஏன் இவ்ளோ உயரம்?  பைசா அதிகமா செலவு செய்ரனு கேட்டப்பலாம் "காரணம் இததான் சொன்னேன் ,

யாருமே அப்ப நம்பல ,  இப்ப 4 அடிக்கு மழை தண்ணீர் தேங்கி நிக்குரத பார்த்துட்டு வீட்டுல இருக்குரவங்களால எதுவும் பேச முடியல 🤣

அதே மாதிரி மழை முடிஞ்சி இன்னையோட மூனாவது நாள் , என் மனைவி பிள்ளையும் ஓடையில ஓடுர தண்ணீல பெரிய பெரிய  மீன் நெழியுரத பார்த்து என்கிட்ட போன்ல சொலராஙக 

என் மக அந்த ஓடையில ஓடுர தெளிஞ்ச தண்ணீல குளிக்கலாமானு !  ஆசையா கேட்டப்ப !  தாராளமா குழினு சொல்லி,  மகள் ஆசைக்கு குளிக்க சம்மதம் சொன்னேன்

20/12/23


என் காலம் கடந்து , என் மகள் காலம் வரைக்கும் இயற்க்கை அதன் ரசனையை மாற்றமில்லாம கொடுத்துகிட்டேதான் இருக்குதுல ! 

அன்னைக்கு நான் வீட்டுக்கு தெரியாம குளிச்ச ஓடையில !  இன்னைக்கு என் மக என்னோட அனுமதியோட   நான் குளிச்ச  அதே ஓடை தண்ணீல விளையாடுரத பார்க்குரப்ப , 

15 வருசம் முந்தைய வசந்த கால நினைவுகள்  பின்னாடி போயிட்டு வந்துட்டேன் .... 

 (ஓடை அன்றும் இன்றும்) 👇




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருட்டு "தம்"